Disqus Shortname

உத்திரமேரூர் அருகே தாங்கலிலிருந்து வெளியேரும் நீரால் விவசாய பயிர் பாதிப்பு

உத்திரமேரூர் நவ, 14
 உத்திரமேரூர் பேரூராட்சி 18 வது வார்டுக்குட்பட்ட காக்கநல்லூர்
கிராமத்தில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாங்கல் உள்ளது. இந்த
தாங்கல் அண்மை காலங்களாக மழைப் பொய்த்துப் போனதால் பல்வேறு நபர்கள்
ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக 14 ஏக்கர் பரப்பளவு
கொண்ட தாங்கல் தற்போது சுருங்கி சுமார் 4 ஏக்கர் மட்டுமே காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையால் தாங்கல் நிரம்பி அங்கிருந்த வெளியேரும் மழை நீர் அருகிலிருக்கும் விவசாய நிலத்தில் தேங்கி
உள்ளது. இதனால் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் நீரில் முழ்கி அழுகி
விட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதி விவசாயி டி.கே.கோபாலகிருஷ்ணன்
கூறுகையில் - எனக்கு செந்தமான நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தேன்,
சிலதினங்களாக பெய்த மழையில் கரும்பு நடவு பயிர் நீரில் முழ்கி அழுகி
விட்டது. இதேப் போல் அருகில் பயிரிட்டிருந்த பல்வேறு விவசாயிகளின்
பயிர்களும் நீரில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் எங்களுக்கு பெருத்த
நட்டம் ஏற்பட்டுள்ளது மேலும் அருகில் உள்ள சிலர் மண்ணைப் போட்டு மதகை
மூடிவிட்டனர். மேலும் மழைநீர் வடியும் வடிகாலும் தூர் வராமல் போன
காரணத்தால் இதுவரையில் மழை நீர் வடியவில்லை இது குறித்து
வட்டாட்சியர்க்கு கைப்பேசியில் தொடர்ந்து புகாரளித்தும் இதுவரை எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்மந்த பட்ட அதிகாரிகள் உடனடி
நடவடிக்கை எடுத்து தகுந்த வெள்ளநிவாரண நிதியுதவி வழங்கிடவும், தாங்கல்
அளந்தும், ஆக்கிரமிப்புக்களை அகற்றியும், மதகுகளை சீரமைத்தும், போர்காள
அடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உதவுமாறு கோரிக்கை
விடுத்துள்ளார்.





No comments