Disqus Shortname

தொடர் மழையிலும் நிரம்பாத உத்திரமேரூர் ஏரி

உத்திரமேரூர் ஏரியில் தற்போது வரை வந்துள்ள மழை நீர்
செடி கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கும் நீர்வரத்து கால்வாய்,
உத்திரமேரூர் நவ, 13
தமிழகத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றானது உத்திரமேரூர் ஏரி.
வைரமேகதடாகம் என்றழைக்கப்படும். இந்த ஏரி  சுமார் 5000 ஏக்கர் பரப்பளவு
கொண்டது. ஏரியிலிருந்து மதகுகள் வழியாக வெளியேரும் உபரிநீர் சுமார்
18-ற்க்கு மேற்ப்பட்ட கிராங்களில் உள்ள 5462 ஏக்கர் நிலங்களில் கரும்பு,
நெல், வேற்கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிகப்படியாக பயிரிடப்படும். ஏரி
முழுவதும் நிரம்பினால் விவசாயிகள் முப்போகம் பயிரிடுவர். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் ஏரி வறண்டு விட்டது. மேலும் கடந்த 2012-13 ஆம் ஆண்டு தூர்வாரி கால்வாய்கள், மற்றும் கரைகள் பலப்படுத்தும்
பணிக்காக சுமார் 1.94 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பணிகள் முறையாக
நடைப்பெறவில்லை. இதனால் ஏரியின் நீர் வரத்து கால்வாய்கள், வருவாய் கால்வாய்கள், சீரமைக்கப்படாமல் தூர்ந்து போய், மரம், செடி, கொடிகள்
வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் ஏரிக்கு மழை நீர் முறையாக
வரவில்லை. மேலும் ஏரி கரைகளில் அரிப்பு ஏற்ப்பட்டுள்ளது. கடந்த சில
தினங்களாக வெலுத்து வாங்கிய மழைக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருமபாலான
ஏரிகள் நிரம்பிய போதிலும் உத்திரமேரூர் ஏரி சிறிதளவே மழை நீர்
வந்துள்ளது. ஏரியினை சார்ந்த குளம், குட்டைகள் கூட நிரம்பாமல் உள்ளது.
ஏரிக்கு நீர்வராததால் உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள விவசாயிகள் கவலை
அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் பெரும்பாளான
நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்தும் பிளாட்டாக மாற்றியும்
விட்டனர் எஞ்சியுள்ள கால்வாய்களும் செடி, கொடிகள் வளர்ந்தும், தூர்ந்து
காணப்படுகிறது. கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணியும் முறையாக
நடைபெறவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பலத்த
மழைக்கு பெருமபாலான ஏரிகள் நிரம்பிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் எங்களது
ஏரி இதுவரை நிரம்பவில்லை. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளின்
வாழ்வாதாரத்தை மேப்படுத்தும் வகையில் இந்த ஏரியினை பார்வையிட்டு பேர்கால
அடிப்படையில் கால்வாய்கள் அனைத்தையும் சிரமைத்து ஏரி நிரம்ப வழிவகை செய்ய
விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments