Disqus Shortname

உத்திரமேரூர் ஏரியில் கலங்கள் விழுந்தது

 
உத்திரமேரூர் Nov 19,
தமிழகத்தில் மிகப்பெரிய ஏரிகளில் 

ஒன்றானது உத்திரமேரூர் ஏரி.

வைரமேகதடாகம் என்றழைக்கப்படும். இந்த ஏரி  சுமார் 5000 ஏக்கர் பரப்பளவு 

கொண்டது. ஏரியிலிருந்து மதகுகள் வழியாக வெளியேரும் உபரிநீர் சுமார்  

18-ற்க்கு மேற்ப்பட்ட கிராங்களில் உள்ள 5462 ஏக்கர் நிலங்களில் கரும்பு, 

நெல், வேற்கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிகப்படியாக பயிரிடப்படும். ஏரி 

முழுவதும் நிரம்பினால் விவசாயிகள் முப்போகம் பயிரிடுவர். ஆனால் கடந்த 

3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் ஏரி வறண்டு விட்டது.

 கடந்த 3 ஆண்டுகளுக்கு பின்பு, தற்போது உத்திரமேரூர் ஏரி   நிரம்பி  

வழிவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக 

பெய்து  தொடர் கனமழை காரணமாக, சென்னை அருகே உள்ள வேளச்சேரி, 

சேலையூர் ஏரிகள்,  மானம்பதி ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி, தாம்பரம் பெரிய ஏரி, 

கடப்பேரி, செம்பாக்கம் ஏரி  உள்ளிட்ட சுமார் 95 க்கும் மேற்பட்ட ஏரிகள் 

மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. மேலும்,  உத்திரமேரூர்        ஏரிக்கு 

நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே ஏரியில் தண்ணீர் முழு கொள்ளளவை 

  எட்டி  நீர் நிரம்பி வழியும் கலங்கள் விழும் மேடை  அருகே    இன்று  கலங்கள்

விழுவதால்  பொது மக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

No comments