Disqus Shortname

உத்திரமேரூருக்கு கூடுதலாக 108 ஆம்புலயன்ஸ் வாகனம் வழங்க வேண்டும் 6 கிராம மக்கள் வலியுறுத்தல்

 உத்திரமேரூர்.அக்.31 :
  உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட உத்திரமேரூர், மானாம்பதி, கலியாம்பூண்டி, படூர், குருமஞ்சேரி, சாலவாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் அரசு மருத்துவமனைகள் சுகாதார நிலையங்கள் உள்ளன.இந்த சுகாதார நிலையங்களில் சுற்று வட்டாரங்களில் உள்ள கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.  இங்குள்ள  பகுதிகளுக்கு உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் மட்டும் ஒரு 108 அரசு அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளது.இந்த சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் அவசர சிகிச்சைக்கு இந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தான் இந்த அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள். இந்த வாகனம் இல்லையென்றால் 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருங்குழி, அல்லது 28 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செங்கல்பட்டு ஆகிய பகுதியில் உள்ள 108 அவசர சிகிச்சை வாகனம் வரவழைக்கப்படுகிறது.

இந்த வாகனங்கள் வருவதற்குள் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அவசர சிகிச்சை பெற முடியாமல் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.  தற்போது பல்வேறு இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உத்திரமேரூர் பகுதிக்கு மேலும் ஒரு 108 அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க வேண்டும் என்று உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 6க்கும் மேற்பட்ட முக்கிய பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் அரசு சுகாதாரத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments