Disqus Shortname

மதூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம்

 உத்திரமேரூர் நவ.02
உத்திரமேரூர் தாலுக்கா மதூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பேரணி நேற்று நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் மானாமதி வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.உமாதேவி தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் தாமரைசெல்வன் ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். படூர் சுகாதார நிலைய மருத்துவர் கண்ணாதினேஷ் அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் மார்கண்டேயன் கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பேரணியில் கிராமக்கள் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துதல் மற்றும் கொசுக்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தியவாரும் துண்டுபிரசுரங்கள் வழங்கியும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் படூரில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கொசுகளால் ஏற்படும் டெங்கு, மலேரியா, சிங்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவது குறித்தும், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்தும், டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கான அறிகுறிகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. நிகழ்ச்சியின் போது கிராம மக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.  கூட்டத்தில் மருத்துவ அலுவலர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments