Disqus Shortname

திருப்புலிவனத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

உத்திரமேரூர் பிப்,01

உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் ஊராட்சியில் நேற்று சிறப்பு மருத்துவ
முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் சுகாதாரப்பணிகள்  துணை இயக்குநா்
கிருஷ்ணராஜ் வழிகாட்டுதலின் பேரில் நடைப்பெற்ற இந்த முகாமில்
திருப்புலிவனம் ஊராட்சி மன்றத்தலைவர் சரளாபிரகாஷ்பாபு முகாமினை
குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தலைமை தாங்கினார். மானாம்பதி சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.உமாதேவி, களியாம்பூண்டி மருத்துவ அலுவலர் முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஸ்கேன், இ.சி.ஜி, இருதயநோய், சிறுநீரகநோய், எலும்பு, காது, மூக்கு, தொண்டை பெண்கள் சிறப்பு பிரிவு, கண் பரிசோதனை பல் சிகிச்சை, சித்த மருத்துவம் போன்றவற்றிற்கு சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமிற்க்கு திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி, ஆனைப்பள்ளம், பாப்பாங்குளம், மணல்மேடு, ஒழுகரை, மருத்துவான்பாடி, மருதம், சித்தமல்லி, வாடாதவூர் ஆகிய பகுதியிலிருந்து 1142 பேர் கலந்து கொண்டு சிகிச்சைப் பெற்றனர். இதில் 81 பேர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேல் சிகிச்சைக்கு  பரிந்துரை செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் முத்துலட்சுமி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு 12 ஆயிரத்திற்கான காசேலையை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின்,
உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments