Disqus Shortname

உத்திரமேரூரில் அனுமதி பெறாத பேனர்களை அகற்ற நீதிபதி உத்தரவு

உத்திரமேரூர் பிப் 19
உத்திரமேரூர்  நகரின்   பேரூந்து நிலையத்தில் பல்வேறு கட்சி சார்பில் பேனர்கள் வைக்கப்பட் டுள்ளன. இவை, பாதசாரிகள் நடந்து செல்ல இடையூறு ஏற்படுத்துகின்றன. வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறச்செய்து, விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.  அதுபற்றி கவலைப்படாமல் பிளக்ஸ் பேனர் வைப்பது, உத்திரமேரூரில் தொடர் கதையாகி வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கிய இடங்கள் அமைந்துள்ள பகுதிகளில்  பேனர்கள் ஆக்கிரமித்துள்ளன.போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது
  மற்றும் வியாபாரிகளுக்கு இடையூராக உள்ளதாக உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் பொது மக்கள் புகார் செய்துள்ளனர். இதை தொடர்ந்து நீதிபதி ஜெய்சங்கர் பேரூந்து நிலையத்தில் உள்ள பேனர்களை பார்வையிட்டு பேரூராட்சி செயல் அலுவலர் கமல்ராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிளான போலிசாருக்கும் ஆர்.டி.ஓ அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அனைத்தையும் உடனே அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதை குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கமல்ராஜ் கூறுகையில் உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் முறையான அனுமதியின்றி
வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனே போலீசார் உதவியோடு அப்புறப்படுத்துவதாக கூறினார்.

No comments