Disqus Shortname

உத்திரமேரூர் மாகத்மா காந்தி தெருவில் புதிய சாலை அமைக்கப்படுமா?

உத்திரமேரூர் பிப்,07
உத்திரமேரூர் பேரூராட்சி 04-வது வார்க்குட்பட்ட மாகத்மா காந்தி தெரு
மற்றும் கைலாசநாதர் தெற்கு தெரு ஆகிய தெருக்களில் சுமார் 500-ற்க்கும்
மேற்ப்ட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருக்கள் கடந்த 13
ஆண்டுகளுக்கு முன்பாக தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இந்த சாலைக்கு பக்கத்தில் பெரிய நாராசம் பேட்டை தெரு, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய தெருக்கள் சிமெண்டு சாலை அமைத்து விட்டதால் இந்த சாலை மிகவும் தாழ்வாக காணப்படுகிறது. இதனால் மழை காலத்தில் மழைநீர் மற்றும் கழிவுநீர் முழுவதும் வீடுகளில் உள்ளே வந்து விடுவதாக அப்குதி வாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களில் இருந்து கழிவுநீர்  ஒரு சில நேரங்களில்
வெளியேறி சாலை வழியாக செல்கிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் ஆபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் முதிவர்கள் இந்த சாலை வழியாக செல்லும் போது கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. எனவே மாகத்மா காந்தி தெரு மற்றும் கைலாசநாதர் தெற்கு தெரு ஆகிய தெருக்களில் புதியசாலை மற்றும் கால்வாய்கள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments