Disqus Shortname

போலி மருத்துவர் கைது

உத்திரமேரூர் பிப்,05
உத்திரமேரூர் அடுத்த பெருநகரில் பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவர் கண்ணன் (46) இவர் தனது வீட்டிலேயே கடந்த 3 வருடங்களாக மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் பெருநகர் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் கே.கிருஷ்ணராஜ், அறிவுறுத்தலின் பேரில் காஞ்சிபுரம் குழந்தைகள் நல மருத்துவர் ஜி.கிருபாகரன், சுகாதார துறை தொழில் நுட்ப நேர்முக உதவியாளர் வி.பி.சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.உமாதேவி, வட்டார சுகாதார மேற்ப்பார்வையாளர் தாமரைசெல்வன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பெருநகரில் உள்ள கண்ணன் வீட்டில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் இவர் தகுந்த ஆவணங்கள் இன்றி மருந்து மாத்திரைகள் ஊசி போன்றவைகள் பயன்படுத்தியது தெரியவந்தது. உடனே அவற்றை கைப்பற்றி கண்ணனை பெருநகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பெருநகர் போலீசார் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments