Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றியத்தில் 16.கோடியே 10 லட்சங்களில் தார் சாலை பணிகள் நிறைவு

உத்திரமேரூர் பிப்,12

 உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ வாலாஜாபாத் பா.கணேசன் தீவிர முயற்சியால் ரூபாய் 16.கோடியே 10-லட்சங்களில் சிமெண்ட் மற்றும் தார்சாலைப்பணிகள் முடிந்து நிறைவுறும் நிலையில் உள்ளது. பணிகள் விபரம், பென்னலூர் சாலை ஒருவழித்தடத்திலிருந்து இடை வழித்தடமாக மாற்றி பலப்படுத்துதல், ரூ270 லட்சம், உத்திரமேரூர், கம்மாளம்பூண்டி, ஈஞ்சம்பாக்கம்  வரை சாலை பலப்படுத்துதல் 330 லட்சம், அருங்குன்றம், அரும்புலியூர், கரும்பாக்கம் சாலை 90 லட்சம், திருப்புலிவனம், சாலவாக்கம் சாலை 395 லட்சங்கள், நெடுஞ்குன்றம் சாலை 90 லட்சம் உத்தரமேரூர் காஞ்சிபுரம் சாலையில் இருந்து புத்தளி செல்லும் கிராமம் 90 லட்சம் அரசாணிமங்கலம் சாலை பலப்படுத்துதல் 100லட்சம்   உத்தரமேரூர் கம்மாளம்பூண்டி அச்சரப்பாக்கம் சாலையிலிருந்து பிரிந்து காவனூர்புதுச்சேரி வழியாக அத்தியூர், மேல்தூளி செல்லும் சாலை 135 லட்சம் தண்டரை, ஆலத்தூர் சாலை சிறப்பு பழுதுபார்த்தல் 66 லட்சம், அரசாணிமங்கலம் சாலை 6 லட்சம் உத்தரமேரூர் கம்மாளம்பூண்டி, அச்சரப்பாக்கம் சாலையில் இருந்து பிரிந்து காவனூர்புதுச்சேரி வழியாக அத்தியூர்-மேல்தூளி செல்லும் சாலை 31லட்சம், உத்தரமேரூர் கம்மாளம்பூண்டி பிரிந்து செல்லும் வேடந்தாங்கல் வழி சாலை 7 லட்சம் மதிப்பிலும் சாலை பணிகள் நிறைவுற்றுள்ளது. நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் எச்.ரமேஷ், உதவி கோட்ட பொறியாளர் சசிகலா, உதவி பொறியாளர் எச்.சுவிச்சந்திரன் ஆகியோரிடம் உத்திரமேரூர் எம்.எல்.ஏ வாலாஜாபாத் பா.கணேசன் தார் சாலைப்பணிகள் விபரங்களையும் சாலைப்பணிகள் மொத்த செலவுகள் குறித்தும் ஆய்வு செய்தார். உடன் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை, கே.ஆர்.தருமன், கா.ஜெயவிஷ்ணு, பொ.சசிகுமார் அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர்  ஹரிகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.