Disqus Shortname

காவாம்பயிர் கிராமத்தில் ஐந்து கோவில்களில் கும்பாபிஷேகம்



உத்திரமேரூர் பிப், 23

உத்திரமேரூரில் அடுத்த காவாம்பயிர் கிராமத்தில் ஐந்து கோவில்களில்
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று  நடைப்பெற்றது. சுமார் 300 வருடம் பழமை வாய்ந்த ஸ்ரீசுந்தர விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேத
முருகப்பெருமான், ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள், தாந்தோன்றி அம்மன், ஓம் அழகி அம்மன் ஆகிய மூர்த்தியர்ளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் தொண்டை மண்டல ஆதினம் ஸ்ரீ ஞானபிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைப்பெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக கணபதி பூஜை, நவகிரக ஹோமம், கோபூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடைப்பெற்றது. அதை தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால
யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின்
மீது ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ
வாலாஜாபாத் பா.கணேசன், காவாம்பயிர் ஊராட்சி மன்ற தலைவர்
என்.எஸ்.குணசேகரன், இளையராஜா மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் எம்.குமாரசாமி மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இரவு அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் சுவாமி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு
காட்சி அளித்தார்.

No comments