Disqus Shortname

திணையாம்பூண்டியில் வருவாய் திட்ட முகாம்

உத்திரமேரூர் பிப், 21

உத்திரமேரூர் அடுத்த திணையாம்பூண்டி கிராமத்தில் மக்களை தேடி
வரும் வருவாய் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.தனபால் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் வட்டாட்சியர் பேபிஇந்திரா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் மோகனவள்ளி அனைவரையும் வரவேற்றார். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 32 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 17 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 07 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 8 மனுக்கள் நிலுவையில் உள்ளது. நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பேபிஇந்திரா கூறுகையில். கிராமப்புறங்களில் உள்ள பொது இடங்களில் தேங்கிய கழிவு நீரை அகற்றி டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுத்திட வேண்டும், வருவாய் திட்ட முகாமில் பொது மக்களிடம் பெறப்படும் மனுக்கள் குறித்து விளக்கிப் பேசினார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கீதா,  வார்டு உறுப்பினர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர் முடிவில் கிராம நிர்வாக அலுவலர் நல்லமுத்து நன்றி கூறினார்.

No comments