Disqus Shortname

மதுக்கடைகளை மூட மகளிர் சக்தி மது ஒழிப்பு பிரச்சாரம்

உத்திரமேரூர் பிப்,13

தமிழக அரசு மதுக்கடைகளை உடனே மூட வலியுறுத்தி மகளிர் சக்தி இயக்கம் மது
ஒழிப்பு பிரச்சார நடைபயணம் நேற்று எடமிச்சி கிராமத்தில் துவங்கி
கணபதிபுரம் வழியாக தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி
சாலவாக்கம் பேருந்து நிலையம் வரை பேரணியாக வந்தனர். பின்னர் சாலவாக்கம்
பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மகளிர் சக்தி இயக்கத்தின் தலைவி குளோரி துணை தலைவர் விஜி முன்னிலை
வகித்தனர். பொருளாளர் ஏ.அன்புமணி வரவேற்றார். முன்னதாக பேரணியை
சாம்தொண்டு இயக்குனர் மார்டின் துவக்கி வைத்தார். எழுத்தாளர் இராமபிரபு
சிறப்புரையாற்றினார்.  பேரணியில் மக்களை அணி திரட்டு மதுகடைகளை
நிரந்தரமாக மூடுவோம், மகளிர் தினத்தை மது ஒழிப்பு தினமாக
பிரகனபடுத்துவோம், தமிழக அரசே மதுக்கடைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை
விட்டுவிட்டு கல்விக்கு முக்கியத்துவம் கொடு  என கோஷங்கள் எழுப்பினர்.
சாலவாக்கத்தில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் செங்கல்பட்டில் மார்ச் 9-ல்
நடைப்பெற உள்ள மகளிர் சக்தி மாநாடு பேரணியில் அனைத்து மகளிர்களும் கலந்து
கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  சாம் தொண்டு நிறுவன
தலைவர் ஜி.கருணாகரன், துணைத்தலைவர் எஸ். தயாளன், பொருளாளர் கே.தேவராஜன்
கருத்துரையாற்றினார்கள் முடிவில் மகளிர் சக்தி அமைப்பாளர் வி.ஆண்டாள்
நன்றி கூறினார்.

No comments