Disqus Shortname

நாங்கள் குடும்ப அரசியல் நடத்தவில்லை: ராமதாஸ்

உத்திரமேரூர் பிப் 24
குடும்ப அரசியல் நடத்தும் கட்சி பாமக அல்ல என்று அதன் நிறுவனர் ராமதாஸ் ஒரு விழாவில் பேசினார்.
உத்தரமேரூரில் பா.ம.க. மாவட்ட கொள்கை விளக்க அணித் தலைவரின் இல்லத் திருமண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநில துணை பொதுச் செயலாளர்கள் திருக்கச்சூர் கி.ஆறுமுகம், பொன்.கங்காதரன், மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் ந.ஆறுமுகம் வரவேற்றார்.
இந்த விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். அன்புமணி ராமதாûஸ முதல்வர் வேட்பாளராக போட்டியிட சேலம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக, அதிமுக கட்சிகள் 48 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன. இந்தக் கட்சிகளால் மதுவை ஒழிக்க முடிந்ததா?
2016-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் முதல்வராக பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்தே டாஸ்மாக் கடைகளை ஒழிப்பதுதான். மணிலா, நெல், எள், கொள்ளு, உளுந்தை ஆகிய பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு விற்கும்போது அதிக லாபம் அடைபவர்கள் வியாபாரிகள்தான்.
கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போட சொல்லி தொடர்ந்து போராடி வருகிறோம்.
விவசாயிகள் செலவிட்ட முதலே அவர்களுக்கு கிட்டாத சூழலில் ரியல் எஸ்டேட் தரகர்களிடம் குறைந்த விலைக்கு நிலங்களை விற்று விடுகின்றனர்.
அனைத்து தர மக்களையும் ஜாதி பாகுபாடின்றி உறுப்பினராக சேர்க்க வேண்டும். குடும்ப அரசியல் நடத்தும் கட்சி நம் கட்சி இல்லை என்றார் அவர்.

No comments