Disqus Shortname

உத்திரமேரூரில் திமுக தேர்தல் அலுவலக திறப்பு விழா

உத்திரமேரூர் ஏப், 25
உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் திமுக தேர்தல் அலுவலகத் திறப்பு விழா (25-04-2016)நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன்
தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சுப்பைய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜன் அனைவரையும் வரவேற்றார். உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளரும், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர் கலந்து  கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், தொழிலாளர் முன்னேற்ற  சங்கத் தலைவர் து.சுந்தர், மகளிரணி நிர்வாகி காந்தா உட்பட பலர் கலந்து

கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.