Disqus Shortname

பா.ம.க வேட்பாளர் அறிமுக மற்றும் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா

உத்திரமேரூர் ஏப் 21
உத்திரமேரூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அலுவலகம், வேட்பாளர்
அறிமுக மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (21-04-2016)நடந்தது.
உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள பா.ம.க அலுவலகத்தை முன்னாள் எம்.எல்.ஏ சக்திகமலம்மாள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர்
உத்திரமேரூர் தொகுதி வேட்பாளர் பொன்கங்காதரன், காஞ்சிபுரம் தொகுதி
வேட்பாளர் மகேஷ்குமார் ஆகியோர் பெரியார், அம்பேத்கர் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தனியார் திருமணமண்டபத்தில் சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர் அறிமுக மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் கொள்கைப்பரப்பு செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கி உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பொன்.கங்காதரன் காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் மகேஷ்குமார் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையற்றினார். ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் ஆறுமுகம், லட்சுமிநாராயணன், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் சேஷாத்திரி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முடிவில் நகர செயலாளர் அரசு நன்றி கூறினார்.

No comments