Disqus Shortname

அம்பேத்கர் 126–வது பிறந்த நாள்விழா

காஞ்சிபுரம் ஏப் 14

அதிமுக

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் டாக்டர் அம்பேத்கர் 126-வது பிறந்த நாள்விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் உத்திரமேரூர் அதிமுக சட்ட மன்ற வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கழக நிர்வாகிகளுடன் மரியாதை செலுத்தினார். ஒன்றியகுழு தலைவர் இரா.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, பொ.சசிகுமார், உட்பட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

இந்திய குடியரசு கட்சி

இந்திய குடியரசு கட்சியினர் சார்பில் பெரியார் சிலை அருகில் ஊர்வலமாக புறப்பட்டு பஜார் வீதி வழியாக தாரைதப்பட்டை முழங்க டாக்டர் அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு இந்திய குடியரசு கட்சி காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் என்.சம்பத் தலைமை தாங்கி மாலை  அணிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட இணைசெயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் கோபால், துணை செயலாளர் சித்திரை, இணை செயலாளர் சதாசிவம்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் என்.ஏ.தியாகராஜன் வரவேற்றார், நகர தலைவர் எம்.மாணிக்கம் நன்றி கூறினார் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர் விசூர் கன்னியப்பன் தலைமையில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சி.தனசேகரன் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

No comments