Disqus Shortname

உத்திரமேரூரில் வைகோ உருவ பொம்மை எரிப்பு

உத்திரமேரூர் ஏப்.7

திமுக தலைவர் கருணாநிதி குறித்து, வைகோவின் அநாகரிக பேச்சுக்கு தமிழகம்
முழுவதும் திமுகவினர் பல்வேறு இடங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து
வருகின்றனர்.இதில் ஒரு பகுதியாக நேற்று உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் பாரிவள்ளல் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாயஅணி அமைப்பாளர் சோழனூர்  ஏழுமலை, மாவட்ட சிறுபாண்மைப்பிரிவு அமைப்பாளர் தனிஸ்லாஸ், மாவட்ட இயக்கிய
அணி துணை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ் உட்பட 300க்கு மேற்பட்ட திமுகவினர் திரண்டு அங்கு வைகோவின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். மேலும் வைகோவிற்கு எதிராக பல்வேறு கோஷங்கள்
எமுப்பினர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.