Disqus Shortname

பட்டப்பகலில் கோயிலில் நுழைந்து ஐம்பொன் சிலைகள் கொள்ளை

உத்திரமேரூர் ஜீன் 23, : 
உத்திரமேரூர் அடுத்த தினையாம்பூண்டி கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தேவயானை (70) என்பவர், தங்கி வேலை பார்க்கிறார். நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் ஒரு கார் வந்தது. அதில் 5 பேர் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என தேவயனையிடம் கேட்டனர். அவரும், கோயிலுக்கு அழைத்து சென்று

பின்னர் 2 பேர் கோயில் உள்ளே உட்கார்ந்து கொண்டனர். 3 பேர், கோயிலை சுற்றி பார்க்க வேண்டும் என தேவயானையிடம் கேட்டனர். அவரும் கோயிலை சுற்றி காட்டிவிட்டு கோயில் அருகே வந்தார். அப்போது, கோயில் உள்ளே உட்கார்ந்து இருந்த 2 பேர், கையில் பெரிய பையுடன் வெளியே வந்ததை பார்த்து, என்ன அது. கோயில் உள்ளே செல்லும்போது இந்த பை இல்லையே என கேட்டார். உடனே அவரை, அந்த கும்பல் அடித்து கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து காரில் ஏறி தப்பி சென்றது. அவர் அலறி கூச்சலிட்டார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

கோயில் உள்ளே சென்று பார்த்தபோது தலா 3 அடி உயரமுள்ள திரவுபதி அம்மன், ராமர் ஆகிய ஐம்பொன் சிலைகள் மாயமாகி இருந்தது. அவர்கள் கொண்டு சென்ற பையில் அந்த சிலைகளை கடத்தியது தெரியவந்தது. இச்சம்பவத்தை அறிந்ததும், கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் அங்கு திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து  வந்த பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை தேடிவருகின்றனர் மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து மோப்பநாய் அழைத்து செல்லப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. நாய் கார் சென்ற திசை நோக்கி சிறிது நேரம் ஓடி நின்றது. மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதனால் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
அனைத்து சன்னதியிலும் தீபாராதனை செய்தார்.

No comments