Disqus Shortname

திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை

உத்திரமேரூர், ஜூன் 08

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக உள்பட எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று பாமக முதல்வர் பதவி வேட்பாளர் அன்புமணி தெரிவித்தார்.
 உத்தரமேரூர் பேருந்து நிலையம் அருகே பாமக பொதுக்கூட்டம் திங்கள்கிழமை(08-06-2015) நடைபெற்றது.
 கூட்டத்தில் அன்புமணி பேசியது: திமுக, அதிமுக கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளில் என்ன சாதனை செய்தது? இரு கட்சிகளுமே டாஸ்மாக் கடைகள் திறந்து நடத்தியதால் பல குடும்பம் நடுரோட்டிற்கு வந்துள்ளது.
 வருகிற பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக உள்பட எந்தக் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்கமாட்டோம்.
 மருத்துவராகிய எனக்கு தமிழக முதல்வராக வாய்ப்புக் கொடுத்தால் மதுக்கடைகளை ஒழித்து, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்வேன்.
 திராவிட கட்சிகளைப்போல மக்களுக்கு ஆடு, மாடுகள் உள்ளிட்டவற்றை இலவசமாக கொடுக்காமல் சி.பி.எஸ்.இ. கல்விக்கு நிகரான கல்வியை அரசுப் பள்ளிகளில் கொண்டு வருவேன்.
 தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை மூட்டையாக முதுகில் சுமந்து செல்லும் நிலையை மாற்றி, ஒரே ஒரு ஐபேடு மட்டுமே பள்ளிக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பேன்.
 காஞ்சி மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம். இதில், மிக பெரிய ஏரி உத்தரமேரூர் ஏரி. இந்த ஏரியை கூட அரசு முறையாகப் பராமரிக்கவில்லை.
 திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினிடம் 2 ஜி அலைக்கற்றை ஊழல் உள்பட பல்வேறு கேள்விகள் கேட்டுக் கடிதம் அனுப்பினேன். அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
 தமிழகத்தை ஆள, பாமகவுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 50 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய சாதனையை 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம் என்றார்.

No comments