Disqus Shortname

தண்டரையில் மரம் நடுவிழா

உத்திரமேரூர் ஜீன் 18
உத்திரமேரூர் தாலுக்கா சித்தனக்காவூர் ஊராட்சி தண்டரை கிராமத்தில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உலகம் பாலைவனமாவதை தடுக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும்விழா நடைப்பெற்றது.
விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலிதேவிதணிகைவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ்பாபு, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் முத்தம்மாள் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் உலகம் பாலைவனமாவதை தடுக்கும் வகையில் கிராமப்புறங்களில் மரங்களை பாதுகாப்பது, மரங்கள் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மரங்கள் அழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து கிராம மக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. தண்டரை கிராமத்தை சுற்றி 95 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் தூய்மை பாரத இயக்க திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கலந்து கொண்டு திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் கழிவறை கட்டுவதால் ஏற்படும் நன்மைகள், அரசின் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தினை பற்றியும், விளக்கிக் கூறினார். பின்னர் சித்தனக்காவூர் ஊராட்சியில் கழிவறை கட்ட முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 68 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் கிராம வருமை ஒழிப்பு சங்கத்தின் சார்பில் கழிவறை கட்டுவதற்கு முன்பனமாக ரூபாய் 5 ஆயிரத்திற்கான காசேலை 6 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments