Disqus Shortname

அண்ணாத்தூரில் விழிப்புணர்வுக் கூட்டம்

உத்திரமேரூர் ஜீன் 05
உத்திரமேரூர் ஒன்றியம் அண்ணாத்தூர் கிராமத்தில் நேற்று தனிநபர் இல்ல கழிவறை அமைப்பது குறித்த கிராம மக்களிடையே விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முத்தம்மாள்முத்து தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ்பாபு, வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். தூய்மை பாரத இயக்க திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட திட்ட ஒருங்கினைப்பாளர் கெம்பு கலந்து கொண்டு திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் தனி நபர் கழிவறை கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிக்கூறினார். மேலும் கூட்டத்தில் திறந்தவெளியில் மலம்கழிக்காமலிருக்கும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வீட்டிற்கு ஒரு கழிப்பறை அமைத்திடவும், மத்திய அரசின் திட்டத்தினை பற்றியும், கழிப்பறை அமைக்கும் முறைகள் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது. உத்திரமேரூர் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் தனி நபர் இல்லக்கழிவறைகள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக அண்ணாத்தூர் ஊராட்சியில் கழிவறை கட்ட முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 54 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்  பணி மேற்பார்வையாளர் கே.பிரபாகரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பார்த்தசாரதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் பலராமன் நன்றி கூறினார்.

No comments