Disqus Shortname

மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிட திறப்பு விழா தமிழக முதல்வர் கானொலி மூலம் திறந்து வைத்தார்.

உத்திரமேரூர் ஜுன் 12
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மானாம்பதியில் ஆரம்ப சுகாதார நிலையை உள்ளது. இங்கு மானாம்பதி, பெருநகர், இளநகர், தேத்துறை, அனுமந்தண்டலம், மானாம்பதிகண்டிகை உள்ளிட்ட 30திற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு 10 படுக்கைகள் கொண்ட சிகிச்சைப்பிரிவு அரை இருந்தது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு போதிய வசதி இல்லாத நிலையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கூடுதல் கட்டிடம் கட்டித்தர வெகுநாட்களாக கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய 30 படுக்கை அறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாக 87 லட்சம் ஒதுக்கியது. இந்த பணியானது அன்மையில் முடிந்தது. இதன் திறப்புவிழா வெள்ளியன்று நடைபெற்றது. இந்தக் கட்டிடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சி மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், காஞ்சி மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல், காஞ்சி எம்.எல்.ஏ வி.சோமசுந்தரம், ஆகியோர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, சேர்மென் ஆர்.கமலக்கண்ணன், துணைச் சேர்மென் அ.ரவிசங்கர் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், பி.வில்வபதி, ஏ.ராஜமணி, லூசியாஜேம்ஸ் சுகாதாரத்துறை துணை இயக்குனர் சீனுவாசன், வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி,  வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாமரைச்செல்வன், வட்டாட்சியர் ஹரிதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் மருததுவ ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments