Disqus Shortname

இராகுல்காந்தி பிறந்த நாள் விழா

உத்திரமேரூர் ஜுன் 19 
உத்திரமேரூர் தாலுக்கா சாலவாக்கத்தில் நேற்று காங்கிரஸ் இளைய தலைவர் இராகுல்காந்தி பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சாலவாக்கம் வட்டார தலைவர் சித்தனக்காவூர் தேவராஜ் தலைமை தாங்கினார். சாய்ராம், ரமேஷ், சிறுப்பினாயூர்தாமோதரன், கிளக்காடி கோவிந்தன் புல்லம்பாக்கம்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு முன்னாள் மாவட்ட தலைவர் சி.இராமசாமி மாலை அணிவித்தார். பின்னர் அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநில தலைவர் சாலவாக்கம் எம்.உசேன் கழக கொடியினையேற்றி சாலவாக்கம் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் பேனா மற்றும் இனிப்புகள் வழங்கினார். முடிவில் புலிப்பாக்கம்கண்ணப்பன் நன்றி கூறினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.