Disqus Shortname

உத்திரமேரூரில் துரியோதனன் படுகளம்

உத்திரமேரூர் ஜீன் 18

உத்திரமேரூர் பேரூராட்சி சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை
வாந்த கோவில் திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா கோவில். இக்கோவில் மகாபாரத நிகழ்ச்சி கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் தினமும் ஆழ்வராம்பூண்டிராமசாமி மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. நாள்தோறும் வில்வளைப்பு, வஸ்திராபரணம், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் துாது, அபிமன்யூ சண்டை, அரவான் கள பலி, கர்ண மோட்சம் போன்ற நாடகங்கள் நடத்தப்பட்டன. இன்று பீம துரியோதன யுத்தம் நடத்தப்பட்டு பின்னர் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த துரியோதனனை பீமன் வதம் செய்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கொடியேற்றம் துவங்கிய நாள்முதல் தினமும் கிருஷ்ணன், பாண்டவர்கள், திரௌபதையம்மனுடன் முக்கிய வீதிகளின் வழியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாகள் மணி, கருணாநிதி, விழா குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments