Disqus Shortname

உத்திரமேரூரில் இன்று மயானகொள்ளை திருவிழா

உத்திரமேரூர் பிப்-28:  
உத்திரமேரூரில்  உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று (28ம் தேதி) மயான கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. நங்கையர் குளம் அருகில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், மாசி மாத அமா வாசை அன்று, மயானகொள்ளை திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதை முன்னிட்டு, இன்று 28 ம் தேதி, வெள்ளிக்கிழமை, மயானகொள்ளை திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவினை முன் னிட்டு, ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, காப்பு கட்டி, தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், தேர் இழுத்தல், என, பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள். காலை அம்மனுக்கு சிறப்பு  அபிஷேக  அலங்காரமும் , பகல் 12-00 மணிக்கு மேல் அன்னையின் மகிமையை கண்ணுறும் வகையில் பக்தர்களின் மெய்சிலிர்க்க வைக்கும்  பிரார்த்தனை வழிபாடுகளுடன் அம்மன் திரு வீதி உலாவும், மாலை  6.00 மணிக்கு  மயானகொள்ளை உற்சவமும், இரவு   கேளிக்கை  கூத்தும்    இவ்வருடம்  வெகுவிமரிசையாய் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.







No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.