Disqus Shortname

அடிப்படை வசதி இல்லாத கட்டியாம்பந்தல் ஊராட்சி பொதுமக்கள் கடும் அவதி

உத்தரமேரூர் பிர,05



  கட்டியாம்பந்தல் கிராமத்தில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
ஊராட்சி மன்ற தலைவர் ராஜா
உத்தரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல், ஊராட்சி மற்றும் அதனை சுற்றி, சின்னமாங்குளம், பெருங்கோழி, தளவராம்பூண்டி, காரியமங்கலம், காட்டுக்கொல்லை, பம்பயம்பட்டு, வளையபுத்துார், மேட்டுக்கொல்லை, கொளத்துார், வெள்ளைப்புத்துார், சித்தாமூர், சித்தரகுடம், ஆகிய கிராமங்களில் 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டடோர் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் 14 கி.மீ தொலைவில் உள்ள உத்தரமேரூர் (அ) 28 கி.மீ தொலைவில் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் இக்கிராமங்கள் வழியாக கட்டியாம்பந்ததில் இருந்து  செங்கல்பட்டு வரை செல்லும் ஒரே ஒரு பேரூந்து மட்டும் இயங்குகிறது. அது தற்போது சரிவர இயக்கப்படுவதில்லை கல்லுாரி, பள்ளி, மருத்துவமனைக்கு மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்குள்ளாகிறார்கள். இக்கிராமங்களுக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக, இருப்பதால்

இக்கிராமங்களில் கால்நடை வளர்ப்பு தொழிலையே பெரும் அளவு பொது மக்கள் நம்பி பிழைத்து வருகின்றனர். அண்மையில் தமிழக அரசின் வெள்ளாடுகளும், மாடுகளும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதிக்கு கால்நடை மருத்துவமனை இல்லாததால் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் இதர சேவைகளுக்கு சுமார்  15. கி.மீ துாரத்தில் உள்ள உத்தரமேரூர் சென்று வர வேண்டிய உள்ளதால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்க்குள்ளாகின்றனர். கால்நடைகளுக்கு திடீரென கோமாரி போன்ற  நோய்கள் ஏற்பட்டு கால்நடைகளில் இறப்பு அதிகரித்து வருகின்றது.
கட்டியாம்பந்தல் கூட்ரோடில் அரசு மதுபானக் கடை உள்ளது இங்கு மது அருந்துபவர்கள் போதையில் வாகனத்தில் செல்லும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் இக்கடை அகற்ற கிராமமக்கள் பல்வேறு மனுக்கள் கொடுத்தும் இதுவரை அகற்றப்படவில்லை.

இக்கிராமங்களுக்கு பஸ்வசதி, சாலை வசதி, ஆரம்ப சுகாதார நிலையம், போன்ற வசதிகள் தேவை என்றும் மதுபானக் கடை அகற்றவேண்டும் என்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா கூறினார்.

No comments