Disqus Shortname

பி.ஜே.பி.கட்சி நரேந்திரமோடி பிரதமராக வை.கோ.கட்சி பாடுபடும் மல்லை சி.ஏ.சத்யா பேச்சு

உத்தரமேரூர் பிப்-19
உத்தரமேரூர் பேருந்து நிலையத்தில் மதிமுக ஒன்றிய கழகம் சார்பில்
பொதுக்குழு விளக்கபொதுக்கூட்டம் செவ்வாயன்று நடந்தது.  மேற்கு ஒன்றிய
செயலாளர் எல்.மணிவண்ணன் தலைமை தாங்கினார்.  கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தயாளன் வரவேற்றார்.  மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் கே.சங்கரன், ஆர்.தாஸ், ஏழுமலை, என்.கன்னியப்பன் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய இளைஞரணி பி.சுரேஷ் மாநில கொள்கை விளக்கச்செயலாளர் அழகுசுந்தரம், மாவட்ட செயலாளர் தளபதி க.சோமு சிறப்புரையாற்றினார்கள். மதிமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் மல்லை.சி.ஏ.சத்யா பேசியது - பி.ஜே.பி கட்சி நரேந்திரமோடி பிரதமராக வை.கோ கட்சி பாடுபடும் மக்களவையில் காங்கிரஸ் தலைமையிலான அரசை வீழ்த்த தமிழ்நாடு முழுவதும் சூராவளி சுற்றுப்பிரயானம் செய்து வை.கோ.பிரச்சாரம் செய்யபோகிறார்.  வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கபோவது உறுதி.  தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகள் ஆதரவாக யாரும் வரவில்லை. அவர்களோடு எந்தகட்சியும் கூட்டணி வைக்கப்போவதாக கூறவில்லை.  காங்கிரஸ் கட்சி தலைமையில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1 லட்சத்து 76 கோடி ஊழல் செய்து கின்னசில் இடம்பிடித்துள்ளது.  நரேந்திரமோடி குஜராத் மாநிலத்தில் பொற்கால ஆட்சி செய்து தன்னிரைவு பெற்று குஜராத்தில் 24 மணிநேரமும் மின்சாரம் அளித்துள்ளார். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நெசவாளர்கள் பிரச்சனையில் பட்டு ஜவுளி நூற்பாலை செயல்பட்டுவருகிறது. கடந்த அக்டோபர் மாதம் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்க மதிமுக சார்பில் வை.கோ.போராடியுள்ளார்.  உத்தரமேரூரில் பிரசித்திபெற்ற வைரமேகன்தடாகம் ஏரி வரண்டுபோய் உள்ளது.  இந்த ஏரி நீர்பாசனம் 678 ஏரிகளுக்கு நீர் சென்றடையும். ஆனால் இப்பொழுது போதுமான கால்வாய்கள் சீரமைக்கப்படாததாலும், மழைக்காலத்தில் ஏரியில் நீர் தேங்காத நிலை ஏற்பட்டு நன்செய் நிலங்கள் பாலைவனம்போல்  காட்சி அளிக்கிறது.  விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் வருமையில் வாடுகின்றனர்.  இலங்கை தமிழர் பிரச்சனை, இந்தியாவில் ஜாதி, மத கலவரங்கள் நடைபெறாமல் இருக்க மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ.தலைமையில்
பம்பரம் சின்னத்தில் வாக்களித்து பி.ஜே.பி.நரேந்திரமோடி  பிரதமரானால்
தான் இந்தியா வளம்பெற்ற நாடாக திகழும் என்று கூறினார் மல்லை.சத்யா.
முடிவில் நகர துணை செயலாளர் கோ.தனசேகர் நன்றி கூறினார்.

No comments