Disqus Shortname

கல்குவாரிகளால் அவதிப்படும் மதூர் ஊராட்சி மக்கள்

உத்தரமேரூர் பிர 05
தூர் வாரப்படாத கால்வாய்கள், குண்டும் குழியுமான மதூர் கிராம சாலை, அடுத்த படம்: கல்குவாரியில் வைக்கும் வெடி அதிர்வுகளால் சீலிங் உடைந்த வீடுகள்.
உத்தரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதூர் ஊராட்சியில் 3000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மீது செக் மோசடி புகார் காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தலைவரின் அதிகாரம் பரிக்கப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் கட்டுப்பாட்டில் மதூர் ஊராட்சி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதகாலமாக குடிநீர் சரிவர வருவதில்லை அப்படி வரும் குடிநீர் கூட சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் இங்குள்ள மக்கள் நோய்களின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். தெருக்களில் மின் விளக்குகள் ஒன்று கூட எரிவதில்லை. சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலையில் நடந்தோ அல்லது இருசக்கர வாகனத்தில் சென்றாலோ சாலைகளில் விழுந்து காயமடைந்து உயிருக்கே ஆபத்தான சூழலை ஏற்படுத்தி விடுகிறது. மேலும் இந்த ஊராட்சியில் தலைவர் இல்லாததால் ஒரு சில சமூக விரோதிகளால் வருவாய் திட்டம், கிராம சபைக் கூட்டம் போன்ற கூட்டங்கள் ஏதும் சரிவர நடைப்பெறுவதில்லை இதனால் அரசு நலதிட்டங்களும் எதுவும் பொது மக்களை சென்றடையவில்லை. மேலும் இங்குள்ள சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தரவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதூர் கிராமம் அருகில் ஒரு சில கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதில் மதியம் சுமார் 3 மணியளவில் அதிக சக்திவாய்ந்த வெடிக்கள் கற்கல் உடைப்பதற்காக வெடிக்கப்படுகிறது. இதனால் கிராமத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் விரிசல் விடுவது மட்டுமின்றி வீட்டில் உள்ள பொருட்களும் கீழேவிழுந்து உடைகின்றன இது நில நடுக்கமா என்று புரியாமல் மக்கள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். இரவு நேரங்களில் வீட்டின் சீலிங் உடைந்து விழுவதாகவும் இதனால் வீட்டின் உள்ளே உறங்காமல் தெருக்களில் உறங்குவதாக கூறுகின்றனர். கிராமத்தில் உள்ள கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் தூர் வாரப்படாததால் கழிவு நீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கின்றன. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி டெங்கு மலேரியா போன்ற பல்வேறு வியாதிகள் வருகின்றன. கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் பயிற்கள் பயிரிடப்படுகின்றது. இதின் கல் குவாரியில் இருந்து வரும் தூசு பயிர்கள் மேல் படிவதால் பயிர்கள் சரிவர வளர்வதில்லை. குவாரியில் இருந்து இரவு நேரங்களில் ஏராளமான கனரக வாகனங்கள் செல்வதால் பொது மக்கள் சாலையை கடப்பது மிகவும் ஆபத்தாக உள்ளது என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். காலை மற்றும் மாலை வேலைகளில் பேருந்து வசதி குறைவாக உள்ளதால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர்களும் வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே காலை மற்றும் மாலை வேலைகளில் கூடுதல் பேரூந்து இயக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments