Disqus Shortname

அகரம்தூளி சுகாதார நிலையம் சீரமைக்க கோரிக்கை

உத்தரமேரூர் பிப் 08


உத்தரமேரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட அகரம்தூளி, அத்தியூர், மேல்தூளி, குருவாடி, சோழனூர், கடம்பூர், காட்டுப்பாக்கம், மேனலூர், காவனூர்புதுச்சேரி, ஆகிய கிராமங்களில் சுமார் 10,000-த்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அகரம்தூளி கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கப்பட்டு 14 வருடங்களாக இயங்கி வந்தது. அப்போது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் ஒருவரும், துப்புரவு பணியாளர் ஒருவரும், பணியாற்றி வந்தனர். கடந்த 16 வருடங்களாக சுகாதார நிலைய கட்டிடம் சிதலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தை பொது மக்கள் தற்போது மாட்டு தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இங்குள்ள 10த்திற்க்கு மேற்பட்ட கிராமத்தினர். இரவு நேரங்களில் அவசர உதவிக்கு சுமார் 13 கிமீ, தொலைவில் உள்ள உத்தரமேரூர்க்கு வரவேண்டிய சூழல் உள்ளது.
இதனால் கர்பிணிபெண்கள், முதியோர்கள், நோயாளிகள் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக செல்லும் போது கால தாமதம் ஏற்ப்பட்டு சில நேரங்களில் உயிர் இழப்பும் ஏற்படுகிறது.
கலைச்செல்வி
இது குறித்து காவனூர்புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த  கலைச்செல்வி கூறுகையில் எங்கள் பகுதி கிராமங்களை சுற்றி செடி, கொடிகள் முற்கள் அதிகம் இங்கிருந்து பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் அதிகம் உலாவுகின்றன. இரவு நேரங்களில் யாரையேனும் கடித்து விட்டால் இங்கு அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை ஏதும் அருகில் கிடையாது. உத்தரமேரூரிக்கு தான் செல்ல வேண்டும் இதற்கு உத்தரமேரூரில் இருந்து ஆம்புலன்ஸ் வருவதற்க்குள் உயிர் இழுப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு  இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து விரைந்து துவங்கினால் அருகில் உள்ள கிராம மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதனை விரைந்து துவக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments