Disqus Shortname

2 ஆண்டாக நிறுத்தப்பட்டுள்ள உத்திரமேரூர் - வந்தவாசி சாலையில் மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை

உத்தரமேரூர் பிர 08
உத்தரமேரூரில் இருந்து வேடபாளையம், காட்டுப்பாக்கம், மேனலூர், காவனூர்புதுச்சேரி, காரியமங்கலம், மணித்தோட்டம், குப்பையநல்லூர், நீரடி, பட்டஞ்சேரி, பூந்தண்டலம், அரசாணிமங்கலம், சோழனூர், குருவாடி, ஒட்டந்தாங்கல், இரும்பேடு, கிழ்நர்மா, ஆரியாத்தூர், வழுர் ஆகிய கிராமங்கள் வழியாக வந்தவாசி வரை w6a பேருந்து நாள் ஒன்றுக்கு 6 முறை சென்று வந்த பேருந்து கடந்த ஒரு வருட காலமாக காலை ஒரு முறை மட்டும் இயக்குகின்றது இதே போல் 104E வந்தவாசிலிருந்து இக்கிராமங்களின் வழியே  சென்னை வரை சென்ற பேரூந்தும் கடந்த ஒன்றரை வருட காலமாக இயக்கப்படுவதில்லை  இதனால் சென்னைக்கு வேலைக்கு செல்லும் கிராம மக்கள் பெரிதும் சிரமத்திற்க்குள்ளாகின்றனர். இடையே உள்ள 15 க்கும் மேற்பட்ட கிராமத்தில் 20,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இடைபட்ட கிராமகளில் உள்ள கல்லூரி பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும்  கிராமமக்கள் உத்தரமேரூர் வரவேண்டும் என்றால் சுமார் 17 கி.மீ வர வேண்டும்.
இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால்  இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
இக்கிராமங்களுக்கு இடையே மருத்துவமனை ஏதும் இல்லாததால் இங்குள்ள கிராமங்களில் கர்பிணிபெண்கள், முதியோர்கள், நோயாளிகள் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக 17 கி.மீ. தொலைவில் உள்ள உத்தரமேரூர் செல்ல வேண்டிய உள்ளதால் சில நேரங்களில் உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது போன்று இக்கிராமம் வழியே செல்லும் சாலைகளில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை,
இது குறித்து சோனூரை சேர்ந்த மா.ஏழுமலை கூறுகையில் w6a மற்றும் சென்னை வரை சென்றுக்கொண்டிருந்த 104E பேருந்துகளை மீண்டும் இயக்கவும் இக்கிராமங்களுக்கிடையே 24 மணி நேரங்களில் செயல்படும் ஆரம்ப சுகாதார மையம்இக்கிராமங்களுக்கு செல்லும் சாலைகளை சீரமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.  

No comments