Disqus Shortname

சாலை சீரமைக்க கோரிக்கை

த்தரமேரூர் பிப் 09
உத்தரமேரூர் அடுத்த ஆள்வராம்பூண்டி, நாஞ்சிபுரம், இருளர்காலனி, மேட்டுக்கொல்லை, காட்டுக்கொல்லை, தட்டாம்பூண்டி, பாப்பநல்லூர் ஆகிய கிராமங்களில் சுமார் 5000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.  காவனூர்புதுச்சேரி கூட்ரோடு முதல் பாப்பநல்லூர் பிரதான சாலை வரையில் சுமார் 6 கி.மீ தொலைவிலான சாலை பழுதடைந்துள்ளது. இச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் புதியதாக சாலை அமைக்க ரூபாய் 1 கோடியே 75 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்காக இந்த சாலை முழுவதுமாக பெயர்த்துள்ளனர் 8 மாதங்கள் மேலாகியும் இது வரை சாலை அமைக்கும் பணி முடிவடையாததால் இந்த சாலையின் இடையே உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களும் வேலைக்கு செல்லும் ஊழியர்களும் வர்த்தகர்களும் குறிப்பிட்ட நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் சிறமத்திற்குளாகின்றனர். அதுமட்டுமின்றி சாலைகள் பெயர்த்துள்ளதால் நடந்து செல்பவர்களின் கால்களை கற்கல் பதம் பார்த்து விடுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்ட முடியாமல் தள்ளிகொண்டு செல்லுகின்றனர். மீறி ஓட்டி சென்றால் வாகனம் பஞ்சர் ஆவதும் தினசரி கீழே விழுந்து காயமடைந்து மருத்துவமனைக்கு செல்வதும் வாடிக்கையாகி விட்டது. இரவு நேர இருசக்கர வாகனப் பயணங்களால் உயிர்க்கே ஆபத்தான சூழல் ஏற்படுவதாக பொது மக்கள் கூறுகின்றனர். இந்த வழித்தடத்தில் ஒரே ஒரு மினிபேருந்து மட்டும் இயங்குகிறது அதுவும் சாலை சரியில்லாததால் ஆங்காங்கே பஞ்சராகி நின்று விடுகிறது. இதில் பிரயானம் செய்யும் பொது மக்கள் கர்பிணிப்பெண்கள் மாணவ-மாணவியர்கள் மிகவும் சிறமத்துக்குள்ளாகின்றனர். மேலும் இந்த சாலையில் அரசு பேருந்து எதுவும் இது வரை இயக்கப்படுவதில்லை. எனவே இச்சாலையை உடனே சீரமைக்கவும் இச்சாலை வழியே அரசு பேருந்து இயக்கவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments