Disqus Shortname

உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியக்குழு சிறப்பு கூட்டம் தொழில் உரிமைக் கட்டணம் உயர்வு

உத்தரமேரூர் டிச,10
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியக்குழு சிறப்புக்கூட்டம் ஒன்றிய மன்ற கூட்டத்தில் திங்கட்கிழமையன்று நடந்தது, ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். உத்தரமேரூர் தொகுதி சட்ட பேரவை  உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சி.கிருஷ்ணமூர்த்தி (கி,ஊ) வரவேற்றார்
.
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய குழு மூலம் கிராம ஊராட்சிகளில் செயல் படுத்தபடும் அனைத்து வகையான அபாயகரமானதும் அறுவருக்கத்தக்கதுமான தொழில்களுக்கான உரிமக்கட்டணத்தை ஒன்றுக்கு இரண்டு மடங்காக உயர்த்தி மறு நிர்ணயம் செய்ய விவாதம் நடந்தது. இதில் சோடாகடை. பட்டாணி, இனிப்பகடைகளுக்கும் பழைய கட்டண விகிதம் 100ல் இருந்து 200 ஆகவும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைக்கு 1 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாகவும் சுத்திகரித்த குடிநீர் தயாரித்தல் மற்றும் விற்றல் 500 ல் இருந்து 5 ஆயிரமாகவும் சேம்பர் 2 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாகவும் ஆக பிரயாணிகள் தங்கும் விடுதி.ரூ500;ல் இருந்து 1 ஆயிரமாகவும் கல்உடைக்கும் தொழிற்சாலை கிரஸ்ஸர் 2 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாகவும் ஆக  மொத்தம் 85 வகையான  தொழில்களுக்கான உரிமை கட்டணம் உயர்த்திட ஒன்றிய குழு சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன் ஒன்றிக்குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர் ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு,வட்டாரவளமைமைய மேற்பார்வையாளர் இராஜேந்திரன் உட்பட ஒன்றிய குழு நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.ஆரியமாலா (வ.ஊ.)நன்றி கூறினார்.

No comments