Disqus Shortname

சான்றிதழ் வழங்கும் விழா

உத்தரமேரூர் டிச,21
உத்தரமேரூர்  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் புதுவாழ்வு திட்டமும் உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியும் இணைந்து கிராமப்புற வறுமை நிலையில் உள்ள கல்விகற்க வசதியற்ற இளைஞர்களுக்கு 45 நாட்கள் கொத்தனார் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் கொத்தனார் வேலைக்கான உபகரணங்கள்  வழங்கும் விழா மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லுா நிர்வாக அலுவலர் பலராமன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஏ.ராஜேந்திரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ராஜா மற்றும் புதுவாழ்வு உதவி திட்ட மேலாளர் தில்லை நாயகம் ஆகியோர் பயிற்சியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நற்குணங்கள் அவர்களின் வேலைத்திறமை பற்றிச் சிறப்பரையாற்றினார்கள். விழாவில் புதுவாழ்வு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அணித்தலைவர்கள் மற்றும்  திரளான கொத்தனார். பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.அணித்தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

No comments