Disqus Shortname

உத்தரமேரூரில் மின்வெட்டை கண்டித்து திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


உத்தரமேரூர் டிச-18
        உத்தரமேரூர் கே.எம்.ஆர் பேரூந்துநிலையத்தில் செவ்வாய்கிழமையன்று அதிமுக
ஆட்சியின் வரலாறு காணாத மின்வெட்டை கண்டித்து மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடந்தது. 

 ஒன்றிய கழக செயலாளர் இரா.நாகன் தலைமை தாங்கினார்.
 பேரூர் செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல் வரவேற்றார்.  பொதுக்குழு உறுப்பினர்
கே.ஞானசேகரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கு.துரைவேல் முன்னிலை
வகித்தனர்.  மாவட்ட விவசாயஅணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை கண்டன
உரையாற்றினார்.  எஸ்.ஆர்.அப்பாதுரை, டி.கே.கோபாலகிருஷ்ணன்,
எ.கே.சீதாராமன், திருப்புலிவனம் கோ.காளிதாஸ், மருதம் கே.மாயகிருஷ்ணன்,
மதூர் ஊராட்சி மன்றத்தலைவர் பி.சண்முகம் ஆகியோர் உரையாற்றினர்.
தமிழ்நாட்டில் இருட்டில் வாழும் மக்களுக்கு மின்சாரம் கேட்டும்,
கருணாநிதி ஆட்சியில் 2 மணி நேரம் மின்வெட்டு மட்டுமே, ஆனால்   தமிழக அரசு
ஜெயலலிதா ஆட்சியில் 18 மணிநேரம் மின்வெட்டால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு,
வழிப்பறி ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிப்படைந்துவருகின்றனர். ஆகவே, தமிழக
அரசு மின்வெட்டை நிறுத்தவேண்டும் என்று உத்தரமேரூர் திமுக ஒன்றியத்தின்
சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட அவைத்தலைவருமான க.சுந்தர்
சிறப்புரையாற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்துவைத்தார். 310-க்கு
மேற்பட்ட திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கூக்குரலிட்டனர்.
கவுன்சிலர் நா.உதயசூரியன் நன்றி கூறினார்.

No comments