Disqus Shortname

உத்தரமேரூர் ஜயப்பா சேவா சங்கம் 7 ம் ஆண்டு விளக்கு பூஜை

உத்தரமேரூர் டிச,11


உத்தரமேரூர் ஸ்ரீ ஜயப்பா சேவா சங்கம் 7ம் ஆண்டு விளக்கு பூஜையும் அன்னதான விழாவும் உத்தரமேரூர் பி.டி.என். திருமண மண்டபத்தில் செவ்வாய்கிழமையன்று நடந்தது. உத்தரமேரூர் முத்து பிள்ளையார், ஆலயத்திலிருந்து 108 பால் குடத்தை பக்தர்கள் சுமந்து வந்து  ஸ்ரீ பாலசுப்பிரமணி சுவாமி ஆலயத்தில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா சுவாமிக்கு 157 ஜயப்பா பக்தர்கள் பாலபிஷேகம் செய்தனர்.
 சென்னை  திருவிக.நகர் குருசாமி ரவிச்சந்திரன் விளக்கு பூஜைகளுக்கு நடத்தினார். உத்தரமேரூர் 18ம் ஆண்டு சபரி மலைக்கு செல்லம் அய்யப்ப குருசாமி முருகானந்தம் 1067 பேருக்கு இலவச அறுசுவை உணவு வழங்கினார். எம்.எஸ்.பாபு குழுவினால் ஜய்யப்பா பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. விளக்கு பூஜை, பால்அபிஷேகம் விழாவிற்கான ஏற்பாடுகளை டாக்டர் ஆனந்த் எஸ்.கமல்கிஷோர்.  யூ.அமர்த்தலால், கஜாசாமி, பில்கி, டி,கே,பர்சன் செய்திருந்தனர். 

No comments