Disqus Shortname

சாலவாக்கத்தில் 19.5 லட்சத்தில் சிறப்பு மனுநீதி முகாமில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் சித்திரைசேனன்

உத்தரமேரூர் டிச-14
        உத்தரமேரூர்  தாலுக்கா, சாலவாக்கம் கிராமத்தில் வியாழக்கிழமையன்று
சிறப்பு மனுநீதி முகாம் நடந்தது.  உத்தரமேரூர் சட்டபேரவை உறுப்பினர்
வாலாஜாபாத் பா.கணேசன் வரவேற்றார்.  ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்
ஆர்.கமக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றிய கழக செயலாளர்கள்
கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு


மனுநீதி முகாமில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் பெரும் வீட்டு பட்டா 24
பயனாளிகளுக்கு 5 லட்சத்து 2 ஆயிரத்து 526 ரூபாய்,  தமிழ்நாடு முதலமைச்சர்
உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை 121
பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 52 ஆயிரமும் ஆக மொத்தம் 19 லட்சத்து 54
ஆயிரத்து 526 ரூபாய்க்கு உண்டான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர்
எல்.சித்திரைசேனன் வழங்கி, மேலும் பேருந்துநிலையம் அருகே நவீன கழிப்பறையை
திறந்துவைத்து பாராட்டி பேசினார். உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜ்
நன்றி கூறினார். இவ்விழாவில் உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
சி.கிருஷ்ணமூர்த்தி, எ.ஆரியமாலா, சாலவாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர்
வனிதா முருகன், மாவட்ட கவுன்சிலர் சுமதி குணசீலன், ஒன்றிய பேரவை செயலாளர்
திருவந்தவார் முருகன், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தண்டரை
டி.தணிகைவேல், ஒன்றிய பாசறை துணைச்செயலாளர் வி.ரமேஷ், ஒழையூர்
ஆர்.நாராயணசாமி, குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அ.பி.சத்திரம்
கோ.பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments