Disqus Shortname

கண் சிகிச்சை முகாம்

உத்தரமேரூர் டிச,12
கிராம விடியல் சிறுகடன் திட்டத்தின் உத்தரமேரூர் கிளையும் ஸ்ரீ ரமண மக ரிஷி கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து இலவச கண்சிகிச்சை முகாம் புதன்கிழமையன்று நடைபெற்றது. இம்முகாமில் மண்டல மேலாளர் முகமது அலிப்தீன் தலைமை தாங்கினார். உத்தரமேரூர் கிளை மேலாளர் சே.சுரோஷ்குமார் முன்னிலை வகித்தார். இம்முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்டோர். கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும் 58, நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். இந்த முகாமிற்க்கான ஏற்பாடுகளை உத்தரமேரூர் கிராமவிடியல் கிளை பணியாளர்கள் அனைவரும் செய்து இருந்தனர். முடிவில் பகுதி மேலாளர் .சசிகுமார் நன்றி கூறினார்.

No comments