Disqus Shortname

சாலவாக்கத்தில் உழவர்பாதுகாப்பு விபத்து இழப்பு இயற்கை மரணம் உதவிதொகை எம்.எல்.ஏ.பா.கணேசன் வழங்கினார்,

உத்தரமேரூர் டிச.9
 
உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 92 மாணவர்களுக்கும், 89 மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 181 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை உத்தரமேரூர் சட்ட பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
ஒன்றியகுழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன். துணைத்தலைவர்  அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர்.. பள்ளித்தலைமை ஆசிரியர் கே.வி.ராம்மோகன் வரவேற்றார். தமிழக முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவிதொகை 6 லட்சத்து 90 ஆயிரம் அதற்கு உண்டான காசோலைகள் விபத்தில் காலமான விவசாயிகுடும்பத்தை சேர்ந்தவரின் வாரிசு மனைவிக்கு ரூ,1 லட்சத்திற்கு காசோலை மற்றும் இயற்கை மரணம் அடைந்த நான்கு பேருக்கு தலா ரூ 10 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் காசோலைகளை எம்.எல்.ஏ. பா.கணேசன் வழங்கி சிறப்பரையாற்றினார். இவ்விழாவில் ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன் மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன் சாலவாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் வனிதாமுருகன் ஒழையூர் ஆர்.நாராயணசாமி தண்டரை தணிகைவேல் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்,

No comments