Disqus Shortname

உத்தரமேரூர் அருகே உயிர் பலி வாங்க இருக்கும் மின்சார வாரியம்

உத்தரமேரூர் 22/11/2021

உத்தரமேரூர் அருகே விவசாய நிலத்தில் உடைந்து விழுந்த மின் கம்பங்கள், தூங்கி வழியும்-மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகள் வேதனை வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாகவே, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், உத்தரமேரூர் மின்வாரியத்தினர், மழையால் பாதிக்கப்பட்டு சேதமாகக்கூடிய மின் ஒயர்கள், மின்கம்பங்களை முறையாக கண்டறியவில்லை என, கிராமவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, காக்கநல்லுார் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதால், 20 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் மின்கம்பம் சாய்ந்தது. மின்கம்பம் சாய்ந்து, இரு வாரங்களை கடந்த நிலையில், அதை சீரமைக்க அதிகாரிககள் நடவடிக்கை எடுக்காததால், சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தில் மின் இணைப்பு உள்ளதா?? என, தெரியாத நிலை உள்ளது. மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும், அவற்றை மேய்க்க வருவோர் மின்விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மின்வாரியத்தினர் உறங்கிக்கிடக்காமல், விழித்துக்கொண்டு களப்பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

No comments