Disqus Shortname

உத்திரமேரூரில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

உத்திரமேரூர் நவ 26,
உத்திரமேரூர் மற்றும் சாலவாக்கம் பகுதிகளில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின்   44 வது பிறந்தநாளையொட்டி 44 கிலோ கொண்ட மெகா சைஸ் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகள் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். நகர செயலாளர் பாரிவள்ளல், விவசாய அணி அமைப்பாளர் ஏழுமலை, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு மெகா சைஸ் கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். இதேப் போல் உத்திரமேரூர் பஜார் வீதியில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏழை எளியோருக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.