Disqus Shortname

உத்திரமேரூர் ஏரியில் உபரி நீர் வினாடிக்கு 200 கன அடி நீர் வெளியேற்றம் கிராம மக்களுக்குவெள்ள அபாய எச்சரிக்கை

உத்திரமேரூர் 08/11/2021
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றானது உத்திரமேரூர் ஏரி. சுமார் 5500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் முழு கொள்ளளவு 20 அடி ஆகும். இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏரி முழுக்கொள்ள்ளவை எட்டி கலங்கல் மூலம் உபரி நீர் வெளியேற்றி வருகிறது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நரிமடை வழியாக நேற்று உபரி நீர் திறக்கப்பட்டது. இதில் சப் கலெக்டர்கள் சுப்பரமணி, சுமதி ஆகியோர் முன்னிலையில் நீர்வளத்துறை உதவிப் செயற் பொறியாளர் நீல்முடியோன், உதவி பொறியாளர் ஜான்தேவகுமார் ஆகியோர் நரிமடை வழியாக நீரை வெளியேற்றினர். இதன்
வழியாக வினாடிக்கு 200 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஏரியின் இருப்புறங்களிலும் உள்ள மேனலூர், காட்டுப்பாக்கம், பாரதிபுரம், காவனூர்புதுச்சேரி, கம்மாளம்பூண்டி, அரசானிமங்கலம் மற்றும் அத்தியூர்மேல்தூளி ஆகிய கிராம மக்களுக்கு ஒளிப்பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்கள் மற்றும் நிவாரண முகாம்களில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நிகழ்வின் போது வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி, செயல் அலுவலர் லதா, இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments