Disqus Shortname

உத்திரமேரூர் அருகே ரெட்டமங்கலம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

உத்திரமேரூர் அடுத்த ரெட்டமங்கலம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜஸ்ரீ, ஒன்றியக்குழு உறுப்பினர் நதியாகோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாமரைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் சர்க்கரை நோய், உப்பு பரிசோதனை, அறுவை சிகிச்சை பரிசோதனை, இருதய நோய், காது, மூக்கு, தொண்டை, தோல் சிகிச்சை, குழந்தை மற்றும் பெண்கள் சிறப்பு மருத்துவம், காசநோய் பரிசோதனை, எலும்பு சிகிச்சை, சித்தமருத்துவம் போன்ற பல்வேறு வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இருந்து சிறந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில் ரெட்டமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 464 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பெற்றவர்களுக்கு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கி ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுஜாதா, தமிழ்வேந்தன், ஜெயகுமார், ரத்தினமாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments