Disqus Shortname

மழைக்கு ஒழுகும் ஆதவபாக்கம் அரசு பள்ளி

மழைக்கு ஒழுகும் ஆதவபாக்கம் அரசு பள்ளி

உத்திரமேரூர் 07/11/2021 : ஆதவபாக்கத்தில், புதிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டு, திறப்பு விழா நடைபெறாததால், மழைக்கு ஒழுகும் பழைய ஓடு வேய்த கட்டடத்திலேயே மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அவல நிலை உள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், ஆதவபாக்கம் ஊராட்சியில், 1940ல் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஓடு வேய்த பழைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 60க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.ஓடு வேய்த கூரை என்பதால், குரங்குகளின் அட்டகாசத்தால், ஓடுகள் உடைந்து, மழைக்கு ஒழுகும் அவலநிலை உள்ளது.மேலும், பழமையான கட்டடம் என்பதால், புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, திருத்தி அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிகள் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 2019 - 20ம் ஆண்டு, 15.47 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.புதிய
கட்டடம் கட்டப்பட்டு, ஒராண்டு நிறைவு பெற உள்ள நிலையில், திறப்பு விழா நடத்தப்படாமல் உள்ளதால், மழைக்கு ஒழுகும் பழைய கட்டடத்திலேயே மாணவர்களுக்கு ஆபத்தான நிலையில் பாடம் நடத்தும் அவல நிலை தொடர்கிறது.கொரோனா ஊரடங்குக்கு தளர்வுக்குபின், நவ.,1ல் பள்ளி திறக்கப்பட்டபோது, கூரை ஓடுகள் உடைந்து மழைக்கு ஒழுகியதால், ஓடுகள் சரி செய்யப்பட்ட பின்னரே பள்ளி திறக்கப்பட்டது.எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள் புதிய பள்ளி கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, மாணவ - மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thanks
Dinamalar News

No comments