Disqus Shortname

உத்திரமேரூர் ஏரிக்கரை மணல் மூட்டை மூலம் தடுப்பு

 உத்திரமேரூர் :


உத்திரமேரூர் ஏரிக்குள், அலைகளால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மணல் மூட்டைகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஏரி, 18 மதகுகளுடன், 5,636 ஏக்கர் பாசன பரப்பும், 0.958 டிஎம்.சி., நீர் கொள்ளளவும் கொண்டது. இந்த ஏரிநீரை, 18 கிராமங்களை சேர்ந்த, 5,462 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையால், ஏரியின் முழு உயரமான, 20 அடியும் நிரம்பி, மூன்று கலங்கல் வழியாக வினாடிக்கு, 537 கன அடிஉபரி நீர் வெளியேற்றப்படுகிறது.உத்திரமேரூர் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக, ஏரிக்கு அதிக நீர் வரத்து அதிகரித்துள்ளதால், நரிமடை திறக்கப்பட்டு, வினாடிக்கு, 100 கன அடி நீர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.இந்நிலையில் காற்றின் அலைகளால் ஏரிக்கரையில் மண் அரிப்பை தடுக்க பொதுப்பணித் துறை சார்பில், மணல் மூட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து உத்திரமேரூர் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:காற்றின் வேகத்தால், அதிகமாக அலைவீசும்போது, கலங்கல், மதகு உள்ளிட்ட இடங்களில் மண் அரிப்பு ஏற்படும்.இதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் மூலம், மதகு, கலங்கல் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு அமைத்து வருகிறோம்.மேலும், ஏரிக்கரையை சுற்றிலும், 2,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

thanks 

Dinamalar

No comments