Disqus Shortname

உத்திரமேரூர் அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 2 கிலோ தக்காளி இலவசமாக வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர்

உத்திரமேரூர் நவ 28
உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று 60 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பொது மக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சத்தியாசக்திவேல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரூ. 2 கிலோ தக்காளி இலவசம் என பொது மக்களை கவரும் வகையில் அறிவிப்பை வெளியிட்டார். அதேப் போல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அனைவருக்கும் 2 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது அன்றாட சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளி விலை உச்சத்தில் உள்ள நிலையில் இது போன்ற அறிவிப்பு பொது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனால் சாலவாக்கம் கிராம மக்கள் பலர் ஆர்வத்துடன் தடுப்பூசியினை செல்லுத்திக் கொண்டனர். 60 தடுப்பூசி முகாம்களில் 1083 பேர் செலுத்திக் கொண்ட நிலையில் சாலவாக்கம் கிராமத்தில் மட்டும் 286 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கடந்த வாரம் சாலவாக்கத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 5 கிலோ சாப்பாட்டு அரிசி மற்றும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

No comments