Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்

உத்தரமேரூர் 10/11/2021
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் எல்.சுப்பிரமணியன் இ.ஆ.ப, அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணிமண்டபம், அம்மையப்பநல்லூர் மற்றும் ஆணைப்பள்ளம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் எல்.சுப்பிரமணியன் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை குறித்து கேட்டறிந்தனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களிடம் கல்வி கற்பதன் அவசியம் மற்றும் கல்வி குறித்த விழிப்புணர்வுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஏற்படுத்தினார்கள். தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடுப்பூசி குறித்து மேலும் முகாம்களில் நன்மைகளை எடுத்துரைத்து தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் அங்கு தங்கியிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். முகாம்களில் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு உடனடியாக ஆதார் அட்டை முகாம் ஏற்படுத்தி முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கிட வழிவகை செய்யுமாறு அறிவுறுத்தினார். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு குழந்தை திருமணம் மற்றும் குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் தற்போது அரசு முகாம்களான காரணிமண்டபத்தில் 45 நபர்களும், அம்மையப்பநல்லூர் 57 நபர்களும், ஆணைப்பள்ளத்தில் 19 நபர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.





No comments