Disqus Shortname

உத்திரமேரூர் அருகே அரசு அலுவலர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்தில் பெரும்பாளானோர் விவசாயம் மற்றும் கால்நடை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இதில் ஏராளமான விவசாயிகள் ஏரி நீரை நம்பி மட்டுமே பாசன பயிர் செய்து வருகின்றனர் இந்நிலையில் தற்போது பெய்த கனமழையால் வயல்வெளிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயல்வெளிகளில் செல்லும் மழை நீரானது ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருதம் குண்ணவாக்கம் சாலை குறுக்கே உள்ள சிறு கால்வாயினை அப்பகுதியியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து அடைத்துள்ளதாகவும், இந்த அடைப்பினால் அப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் செல்லாமல் விவாயம் பாதிக்கப்டுவதாகவும் அப்பகுதி விவசாயிகள் அரசு அலுவலர்களுக்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர் சுஜிதா ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள் ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாயினை சீரமைக்க வலியுறுத்தி அரசு அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

No comments