Disqus Shortname

கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு

 உத்தரமேரூர் ஏப்,23, :
நெல்வாய் கூட்டுரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிகளால் அதனை சுற்றியுள்ள 50திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிது பாதிக்கப்படுகின்றனர். இது மட்டுமின்றி கனிம வளம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. கல் குவாரிகளில் கற்கள் உடைப்பதற்காக பயன்படுத்தப்படும் வெடிகளால் ஏற்படும் புகையினால், பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. மேலும் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களின் மீது படிந்து பயிர்கள் வளராமல் முற்றிலும்
பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் பயிர்கள் காய்ந்து நிலம் தரிசாக
காணப்படுகிறது. மேலும் இயற்கை வளமான மலைகளை குடைந்தும் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமான கற்களை பெயற்த்தும் இயற்க்கை வளங்களை முற்றிலும் அழித்து வருகின்றனர். வெடிகள் வைக்கும் நேரங்களில் அருகில் இருக்கும் கிராமங்களில் உள்ள கிராமவாசிகளின் வீடுகள் அதிர்வதுடன் அவ்வப்போது உடைந்து விழுந்தும் விடுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பழவேரி கிராமத்தில் தனியார் கல்குவாரி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக 20 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் மதியம் 2 மணியளவில் வெடி வைப்பதாகவும் இதனால் ஏற்படும் கற்களின் சிதறல்கள் விவசாயி  நிலத்தின் மீதும் அங்குள்ள கால்நடைகள் மீது விழுவதாகவும், இதனை கல்குவாரி நிர்வாகத்திடம் கேட்டதற்கு கல்குவாரி நிர்வாகம் எங்கள் நிலங்களுக்கு வராமலிருக்க, எங்களுக்கு மாதம் ரூ 6 ஆயிரம் தருவதாக கூறி என்
அனுமதியின்றி என்பெயரில் பாண்டு தயார் செய்து என்னை கையெழுத்து போட செல்லி கட்டாயப்படுத்துகிறது. இதனால் எங்களது வாழவாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாகவும், கடந்த 17 ஆம் தேதி காஞ்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயியும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ராஜேந்திரன் (57) மனு அளித்துள்ளார். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று மதியம் குவாரி நிர்வாகத்திற்கும் விவசாயி இராஜேந்திரனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விவசாயி தனது குடும்பத்தோடு தங்களது நிலத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார். தகவலறிந்த உத்திரமேரூர் வட்டாட்சியர் பேபிஇந்திரா, சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின்  பேரில் விவசாயி சென்றார். எனவே மாவட்ட நிர்வாகம் இருக்கும்
இயற்க்கை வளங்களையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வளர்களின் கோரிக்கையாக உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம் மதூர், குண்ணவாக்கம், நெற்குன்றம், பழவேரி

No comments