Disqus Shortname

நினைத்ததை நிறைவேற்றும் ஸ்ரீ சுந்தரவரதப் பெருமாள்

உத்திரமேரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுந்தரவரதப் பெருமாள் கோயில், 1200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க திருத்தலம் ஆகும். 'மயன் மதம்' என்ற நூலின் அடிப்படையில், வாஸ்து வித்தையில் திறன் பெற்ற பரமேசுவர தச்சனை கொண்டு, நந்திவர்ம பல்லவனால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. 
 
வைணவத்தில் வைகாநசம், பஞ்சராத்ரம் என்று 2 விதமான ஆகம முறைகள் உண்டு. திருப்பதி கோயில் வைகாநச ஆகம விதிப்படி கட்டப்பட்டதாகும். அந்த ஆகம விதிப்படியே உத்திரமேரூரிலும் கோயில் கட்டப்பட்டு, வழிபாடு நடந்து வருகிறது. 
 
வைகாநச ஆகமத்தில் "சகஸ்ராதிக விப்ரக்ராமி" எனும் பிரமாண வாசகம் ஒன்று இருக்கிறது. இக்கோயில் 16ம் நூற்றாண்டுக்கு உரிய கோயில் என்றும் உத்திரமேரூர் கயிலாசநாதர் கோயில் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், மேலும் 3 கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவை, காரைக்குடி திருக்கோட்டியூர் கோயில், மதுரை கூடலழகர் கோயில், சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் ஆகும். 
 
நவ மூர்த்தி பிரதிஷ்டையுடன் கூடிய, அஷ்டாங்க விமானம் இக்கோயிலில் மட்டுமே உள்ளது தனிச்சிறப்பாகும். திருமந்திரத்தின் 8 எழுத்துக்களை உணர்த்தும் வகையில் இந்த அஷ்டாங்க விமானம், மூலைக்கு 2 முகமாக அமைந்துள்ளது. மேலும் இக்கோயிலில் வைணவத்தின் 3 ரகசியார்த்தங்களை குறிப்பிடும் வகையில், 3 தலங்களை கொண்டுள்ளது. 
 
கோயிலின் முதல் தலத்தில் கிழக்கு நோக்கி, வைகுந்த பெருமாள் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். தெற்கே பார்க்கும் கிருஷ்ணார்ஜூனன், மேற்கே நோக்கும் யோக நரசிம்மன் மூர்த்தி, வடக்கே பார்க்கும் போது லட்சுமி வராக மூர்த்தி என்று இங்கே உள்ள வடிவங்களில் எழில் கொஞ்சுகிறது.
இத்தலத்தின் வெளியில் நின்று பார்த்தால் அஷ்டாங்க விமானத்தின் அழகு முழுமையாக தெரியும். அடுத்த தலத்தில் திருவரங்கநாதர் தெற்கே சிரம் வைத்து தரிசனத்திற்கு போவோரை நோக்கியபடி படுத்திருக்கிறார். மரீசு மகரிஷியும், மார்க்கண்டேயரும், பிரம்மாவும், ஸ்ரீதேவியும் இவரை வணங்கும் நிலையில் இருக்கிறார்கள்.

No comments